உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் தேசிய விண்வெளி கண்காட்சி

ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் தேசிய விண்வெளி கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் இஸ்ரோ சார்பில், தேசிய விண்வெளி தின கண்காட்சி இன்று (6ம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இஸ்ரேவின் சதீஷ் தவான் விண்வெளி மையம், புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கம், ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளி இணைந்து, தேசிய விண்வெளி தின கண்காட்சியை வில்லியனுார் பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் உறைவிடப் பள்ளியில் இன்று 6ம் தேதி முதல் நாளை 7ம் தேதி வரை இரண்டு நாட்கள் நடத்துகின்றன. காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கும் கண்காட்சியில் ராக்கெட் மாதிரிகள், செயற்கைகோள்கள் இடம்பெறுகின்றன. மேலும் எதிர்கால விண்வெளி திட்டங்கள் குறித்து இஸ்ரே மூத்த விஞ்ஞானிகளுடன் நேரடியாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து மாணவர்களுக்கு ஓவியம், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டிகள் நடக்கிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள், மாணவர்கள், விண்வெளி ஆர்வலர்கள் கலந்து கொண்டு பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை