உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நட்டா, கார்கே வருகை சூடு பிடிக்குது தேர்தல் களம்

நட்டா, கார்கே வருகை சூடு பிடிக்குது தேர்தல் களம்

புதுச்சேரி: தேர்தல் பிரசாரத்திற்காக, பா.ஜ., - காங்., தலைவர்கள் புதுச்சேரிக்கு வருகின்றனர்.புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் களம் இறங்கி உள்ளார்.இருவரும் ஒவ்வொரு தொகுதியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நமச்சிவாயத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வரும் 15ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். இதற்காக ரோடு ேஷாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று நமச்சிவாயத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.அதுபோல, காங்., தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயும் புதுச்சேரிக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வருகின்ற தேதி இன்று வரை இறுதி செய்யப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி