உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் சர்வீஸ் சென்டரில் திருடிய நபருக்கு வலை

பைக் சர்வீஸ் சென்டரில் திருடிய நபருக்கு வலை

அரியாங்குப்பம், : மோட்டார் பைக் சர்வீஸ் செய்யும் அறையில் புகுந்து திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் சாலை முதலியார்பேட்டை பகுதியில் தனியார் பைக் சர்வீஸ் சென்டர் உள்ளது. அங்கு 7 பேர் பணிபுரிகின்றனர். நேற்று காலையில் சர்வீஸ் சென்டர் அலுவலக அறையின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.மேலாளர் பிரசாந்த் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. சர்வீஸ் சென்டரின் தகர ஷீட்டை பிரித்து, உள்ளே புகுந்து கண்ணாடியை உடைத்து, பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, கடைக்குள் புகுந்து திருடிய நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி