உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் உடல் பருமன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் உடல் பருமன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி:கருவடிக்குப்பம் எம்.வி.ஆர்., மருத்துவ மையத்தில் உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில், மருத்துவமனை நிறுவனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா தலைமை தாங்கி பேசுகையில், இன்றைய மாறுபட்ட வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் மாறுபட்ட உணவு முறை காரணமாக பல விதமான பிரச்னைகளை சந்திக்கின்றனர். உடல் பருமன் அதிகரிப்பதால் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, இதய நோய் மற்றும் மூட்டு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவையான உடற்பயிற்சி இல்லாமை மற்றும் தேவையான அளவு தூக்கம் இல்லாமல் இருத்தல் போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.உடல் எடை குறைப்பதற்கு தேவையான உடற்பயிற்சி போதுமான தூக்கம் சரியான முறையில் உணவு உண்பது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பதை நம்மால் தடுக்க, மருத்துவ மையத்தில் லைப் ஸ்டைல் மாடிபிகேஷன் கிளினிக் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் பதிவு செய்வோருக்கு உடல் எடை குறைப்பதற்கான மருத்துவ மற்றும் உணவு ஆலோசனைகள் சிறந்த முறையில் குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது என்றார். ஏற்பாடுகளை மேலாளர் தேவதாஸ், உணவியல் ஆலோசனை நிபுணர்கள் சந்திரவதனி, மோகனா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை