உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல்

பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கல்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், வேளாங்கண்ணி செல்லும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து, எச்.ஆர்., ஸ்கொயர் நிறுவனம் சார்பில், வேளாங்கண்ணிக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி வழங்கப்பட்டது. தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் நீர் மோர் வழங்கி, துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலை எழுத்தார் செழியன், எச்.ஆர். ஸ்கொயர் நிறுவன நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி