உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தற்கொலை

 புதுச்சேரி: இருந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் வெள்ளிமலை. இவர், கடந்த 5 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி வல்லாத்தம்மாள், 58; கணவர் இறந்ததால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தவர்கள் துாங்க சென்ற நிலையில், வல்லாத்தம்மாள் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !