உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி காரைக்கால் நபரிடம் ரூ. 3.63 லட்சம் அபேஸ்

ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி காரைக்கால் நபரிடம் ரூ. 3.63 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: ஆன்லைனில் பகுதி நேர வேலை என கூறி காரைக்கால் நபரிடம் ரூ. 3.63 லட்சம் பணத்தை மோசடி செய்த சைபர் கிரைம் மோசடி கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காரைக்காலை சேர்ந்தவர் திருகுமரன். இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வீட்டில் இருந்தபடி, பகுதி நேர வேலையாக ஆன்லைனில் பணம் செலுத்தி சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பிய திருகுமரன் மர்ம நபர் கூறிய டாக்ஸ்க்குகளை பணம் செலுத்தி முடித்தார். பல்வேறு தவணையாக ரூ. 3.63 லட்சம் செலுத்தி டாஸ்க்குகள் முடித்தில், லாப பணத்தை எடுக்க முயற்சித்தபோது, ஆன்லைன் போர்ட்டல் முடக்கப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். லாஸ்பேட்டையை சேர்ந்த தினகரன். ஓ.எல்.எக்ஸ் மொபைல் செயலியில், மருத்துவ படுக்கை வாங்க மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார். மருத்துவ படுக்கை முன்பணம் செலுத்தினால் உடனடியாக டெலிவரி அளிக்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி ரூ. 89 ஆயிரம் செலுத்தி ஏமாந்தார். கரையாம்புத்தார் சூர்யா, 19 ஆயிரமும், மரப்பாலம் மேஷாக், ரூ. 44,800, குயவர்பாளையம் சங்கர் ரூ. 46,116, தட்டாஞ்சாவடி தென்னரசு ரூ. 63,000, புதுச்சேரி ராஜா ரூ 5,600, காரைக்கால் நாகார்ஜூன் ரூ 23,500 என மொத்தம் 9 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் ரூ. 6.59 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ