உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் குறிக்கோள்: என்.ஆர்., காங்., கண்டனம்

அரசியல் செய்வதே எதிர்கட்சிகளின் குறிக்கோள்: என்.ஆர்., காங்., கண்டனம்

புதுச்சேரி : 'புதுச்சேரி நலனை பற்றி கவலைப்படாமல், எதிர்கட்சிகள் அரசியல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளன'என, என்.ஆர்.காங்., செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; லோக்சபா தேர்தலில் புதுச்சேரி என்.டி.ஏ., கூட்டணி தோல்வி குறித்தும், மத்தியில் வெற்றி குறித்தும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துக்களை எதிர் கட்சிகள் கூறி வருகிறது.கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்த ஒரு ஆண்டு நிறைவு பெறாத நிலையில், அங்கு என்.டி.ஏ., கூட்டணி ஆளும் காங்., கட்சியை விட அதிக இடம் வெற்றி பெற்று உள்ளது. தெலுங்கானாவில் காங்., ஆட்சி அமைத்து 6 மாதம் கூட முழுமை பெறாத நிலையில், காங்., உடன் சமமான அளவு வெற்றி பெற்றது லோக்சபாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஒரு விதமாக மாறும் என்பதை நிரூபித்துள்ளது. புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் புதுச்சேரி எம்.பி.யை அனுப்புவதின் முக்கியத்துவம் குறித்து முதல்வர் ரங்கசாமி தீவிரமாக பிரசாரம் செய்தார். அமைய போகும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பீகார், ஆந்திரா சிறப்பு மாநில அந்தஸ்து பெறுகிறது. புதுச்சேரி அத்தகைய வாய்ப்பு இழந்துவிட்டது குறித்து எதிர்கட்சிகளுக்கு வருத்தம் ஏதுமில்லாமல், அரசியல் செய்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.காங்., ஜனநாயக வெற்றியை என்.ஆர்.காங்., களங்கப்படுத்த விரும்பவில்லை. விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடக வளர்ச்சி அபரிதமாக ஏற்பட்ட கடந்த 40 ஆண்டுகளில் 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உலகில் எங்கும் இல்லை. தற்போது பிரதான கட்சியாக 240 இடங்களில் பா.ஜ., வெற்றி 3வது முறையாக ஆட்சியை பிடித்திருப்பது மிகப்பெரிய வெற்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி