உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின்சார கட்டண உயர்வு மக்கள் பேரியக்கம் கண்டனம்

மின்சார கட்டண உயர்வு மக்கள் பேரியக்கம் கண்டனம்

புதுச்சேரி: மின்சார கட்டண உயர்வுக்கு, புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கண்டனம் தெரிவித் துள்ளது.இதுகுறித்து, பேரியக்கத்தின் தலைவர் வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி அரசு பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் பலமுறை மின் கட்டணத்தை உயர்த்தி, மக்களை வாட்டி வதைத்து வருகிறது.லோக்சபா தேர்தலில், மிகப்பெரிய தோல்வியை, ஆளும் என்.ஆர்., மற்றும் பா.ஜ., கூட்டணி அரசு சந்தித்தும், எந்த ஒரு பாடத்தையும் கற்காமல், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பது கண்டிக்கத்தக்கது.புதுச்சேரியில் பல்வேறான தொடர் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தகுந்த நிவாரணங்களை கால தாமதம் இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ