உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுக்குப்பத்தில் மின் கம்பம் விழும் முன் சீரமைக்க மக்கள் கோரிக்கை

புதுக்குப்பத்தில் மின் கம்பம் விழும் முன் சீரமைக்க மக்கள் கோரிக்கை

நெட்டப்பாக்கம் : புதுக்குப்பம் கிராமத்தில் சேதமடைந்துள்ள இரும்பு மின் கம்பங்களை அப்புறப்படுத்தி புதிய மின்கம்பம் நடுவதற்கு மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏம்பலம் தொகுதி, புதுக்குப்பம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி தெருக்களில் 20க்கும் மேற்பட்ட இரும்பு மின் கம்பம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் வீடுகளுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் துருப்பிடித்து எந்நேரத்திலும் விழுந்து, உயிர்சேதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது மின் கம்பம் சேதமடைந்துள்ளாதல் எதிர்வரும் மழைக்காலங்களில் தாக்குபிடிக்குமா என தெரியவில்லை. சிறு சேதாரம் உள்ள மின் கம்பங்களுக்கு நாங்களே கான்கிரிட் அமைத்துள்ளோம். பெரிய அளவில் சேதாரம் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வலியுறுத்தி மின்துறை அதிகாரிகளுக்கு புகார் கடிதம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.ஆகையால், மின் கம்பம் விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள இரும்பு மின் கம்பங்களை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை