உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2025-26ம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியீடு

2025-26ம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், மக்களுக்காக 2025-26ம் ஆண்டுக்கான மாதிரி நிதி நிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி தமிழ் சங்கத்தில் நடந்தது.கட்சி தலைவர் ராமதாஸ், வெளியிட சேர்மன் வெங்கட்ராமன் பெற்றுக்கொண்டார்.பின், ராமதாஸ் கூறுகையில், பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கீடு 14 ஆயிரம் கோடியாக இருக்க வேண்டும். இந்நிதியை சொந்த வருவாய் மூலம் 8,800 கோடியாகவும், மத்திய அரசிடம் இருந்து நிதியுதவி 4,457 கோடியாகவும், கடன் வாங்குதல் 743 கோடி ரூபாயாகவும் இருக்கும்.இதன் முக்கிய அம்சமே, அரசின் சொந்த வருவாயையும், மத்திய நிநியையும் பெருக்கி கடன் வாங்குவதை குறைக்க வேண்டும். அதில் வரி வருவாய் 6,200 கோடியும், வரி அல்லாத வருவாய் 2,600 கோடியாகவும் இருக்கும்.இந்தாண்டு வருவாய் செலவாக 10 ஆயிரத்து 300 கோடியும், மூல தன செலவு 3,700 கோடியும் இருக்கும். மக்கள் தொகை மற்றும் நில அளவீட்டில் சதவீதத்தை பொறுத்து ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மொத்த நிதி ஒதுக்கீடு, 14 ஆயிரம் கோடியில், புதுச்சேரிக்கு ரூ. 9,527 கோடியும், காரைக்காலுக்கு ரூ. 3,360 கோடியும், ஏனாமிற்கு ரூ. 7.42 கோடியும், மாகேவிற்கு ரூ. 371 கோடியும் இருக்க வேண்டும்' என்றார்.மாநில செயலாளர்கள் சிவகுமாரன், ரவிகுமார், இணை செயலர் இளங்கோவன், துணை செயலாளர் கலியபெருமாள் பங்கேற்றனர். மாநில துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை