50 சதவீத இடங்களை பெற மக்கள் கழகம் கோரிக்கை
புதுச்சேரி: 'அனைத்து மருத்துவக் கல்லுாரிகளில் இருந்தும் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு பெற வேண்டும்' என, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை வைத்துள்ளது.இதுகுறித்து, அக்கட்சியின் சேர்மன் வெங்கட்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்திற்கு வெளியில் இருந்து வந்து, அனைத்து வசதிகளையும் பெற்று கொண்டு, அரசுக்கு ஒத்துழைக்காத தனியார் மருத்துவ கல்லூரிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மூன்று தனியார் கல்லூரிகளில் உள்ள 650 இடங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு 240 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நான்கு நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்தும் 50 சதவீத இடங்களை அரசு பெற வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.