உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காலாப்பட்டு மத்திய சிறையில் போன் பறிமுதல்

காலாப்பட்டு மத்திய சிறையில் போன் பறிமுதல்

புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறை கைதியிடம் இருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இங்கு, கடந்த 4ம் தேதி இரவு விசாரணை கைதிகள் அறையில் சிறை வார்டர்கள் சுதந்திரகுமார், கலையரசன் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, வில்லியனுார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகன், 33; அறை கழிவறை அருகே மொபைல்போன் ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. மொபைல்போனை கைப்பற்றிய வார்டர்கள் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், சுகன் மொபைல்போன் மறைத்து வைத்து பயன்படுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக காலாப்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சுகன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி