உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2,298 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம்

2,298 காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம்

பட்ஜெட் உரையில் பொது பிரிவில் முதல்வரின் முக்கிய அறிவிப்புகள்:மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,298 பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளோம்.தாய் அல்லது தந்தையை இழந்து அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 5ம் வகுப்பு வரை ரூ.2 ஆயிரமும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும்.அரசு சார்பு மருத்துவ கல்வி நிறுவனங்கள், வேளாண் கல்லுாரி, கால்நடைக் கல்லுாரி அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் நிலுவையில் உள்ள ஊதியத்திற்கு கூடுதலாக ரூ.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏ.எப்.டி., சுதேசி, பாரதி மில்கள், பாப்ஸ்கோ மற்றும் பாசிக்கில் நிலுவையில் உள்ள சம்பளம் மற்றும் கடன்களை திருப்பி செலுத்த ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகையை விரிவாக்கம் செய்ய, டில்லி வளர்ச்சி கழகத்திடம் இருந்த நிலம் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை