உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பா.ம.க., செயற்குழு கூட்டம் 

பா.ம.க., செயற்குழு கூட்டம் 

புதுச்சேரி: கவுண்டன்பாளையம் வன்னியர் சங்க கட்டடத்தில், பா.ம.க., நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.  கிழக்கு மண்டல மாநில அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல அமைப்பாளர் மதியழகன் வரவேற்றார். கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன், முருகசாமி, மண்டல துணை அமைப்பாளர்கள் சங்கர் பாண்டியராஜன், முருகன், சரவணன், புருஷோத், துணைத் தலைவர் சத்யா, மாநில இளைஞரணி தலைவர் சேகர், இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், அமைப்பு ரீதியான பணிகள், மக்கள் பிரச்னைகள் மற்றும் புதுச்சேரியில் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தை அன்புமணியிடம் ஒப்படைத்ததற்கு புதுச்சேரி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க, முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தொகுதி வாரியாக கிளைகள் அமைக்க வேண்டும். புதுச்சேரி– கடலுார் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வடக்கு மண்டல அமைப்பாளர் வடிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !