வாலிபர் மீது போக்சோ வழக்கு
பண்ருட்டி,: பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டை சேர்ந்தவர் ராஜகணபதி மகன் கார்த்திக்,20; இவர் தனது உறவினர் மகளான 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.இதுகுறித்து மாவட்ட குழந்தை நலபாதுகாப்பு அலுவலக ஆற்றுபடுத்துனர் யாமினி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கார்த்திகை தேடி வருகின்றனர்.