உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விஷவாயு தாக்கி பலி: அதிகாரிகள் அலட்சியம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

விஷவாயு தாக்கி பலி: அதிகாரிகள் அலட்சியம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி 'துர்நாற்றம் வருகிறது என புகார் தெரிவித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால், உயிரிழப்பு ஏற்பட்டது' என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.புதுச்சேரி நகர மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் பாதாள சாக்கடையில் இணைப்பு பெற்றுள்ளனர். இதுபோல் பாதாள சாக்கடை வழியாக குடியிருப்புகளுக்குள் விஷவாயு தாக்கினால் மக்களின் நிலை என்னவாகும். கழிவறைக்குள் செல்லும் ஒவ்வொருவரும், அறைக்குள் விஷவாயு வருகிறதா என்பதை கண்டறிந்து விட்டு செல்ல முடியுமா என, பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட பின்பு, ஒட்டுமொத்த அரசு துறையும் களத்தில் இறங்கி வேலை செய்கிறது. கடந்த ஒரு வாரமாக புதுநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது, கனகன் ஏரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 3 நாட்களாக சரிவர செயல்படவில்லை என, புகார் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் பாதாள சாக்கடையை ஆய்வு செய்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என, குற்றம்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ