உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாலிபர் மாயம் போலீசார் விசாரணை

வாலிபர் மாயம் போலீசார் விசாரணை

புதுச்சேரி : வீட்டில் இருந்து வெளியே சென்ற மாயமான வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36; இவர் கடந்தாண்டு நவம்பர் 24ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரை உறவினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காணமால் போன அன்று ராஜேஷ் சந்தன கலர் முழுக்கை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். 166 செ.மீ உயரம், மாநிறம், இடுது பக்க இடுப்பில் பெரிய மச்சம் உள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால், லாஸ்பேட்டை போலீஸ் நிலையம் 2234097 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ