உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புல்லட் திருடிய  எலக்ட்ரீஷியனுக்கு போலீசார் வலை

புல்லட் திருடிய  எலக்ட்ரீஷியனுக்கு போலீசார் வலை

புதுச்சேரி: சேலத்தை சேர்ந்த போட்டி தேர்வு பயிற்சியாளரின் புல்லட்டை திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம், கெங்கவல்லியை சேர்ந்தவர் பழனிசாமி, 25. இவர், தட்டாஞ்சாவடியில் உள்ள தனியார் மேன்ஷனில் தங்கி, வங்கி வேலைக்கான போட்டி தேர்விற்கு தயாராவோருக்கு பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 12ம் தேதி தனது ராயல் என்பீல்டு புல்லட்டை (டிஎன்.77.வி.0903) மேன்ஷன் முன் நிறுவிட்டு உள்ளே சென்றார். மறுநாள் காலை திரும்ப வந்து பார்த்தபோது, புல்லட்டை காணவில்லை. இது குறித்து, அவர் தன்வந்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், பழனிசாமி தங்கியிருந்த மேன்ஷனில்,  சிறு, சிறு வேலைகள் செய்து வந்த எலக்ட்ரீஷியன் வினோத்குமார் என்பவர் பழனிசாமியிடன் பழகி வந்ததும், கள்ள சாவி மூலம் புல்லட்டை திருடி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி