உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை

வக்கறிஞரை மிரட்டியவருக்கு போலீஸ் வலை

புதுச்சேரி : வக்கீல் குடும்பத்தை தொலைபேசியில் மிரட்டியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அபிராமி 32, வக்கீல், இவர் கடந்த 13ம் தேதி நெட்டப்பாக்கம் போலீசில ஒரு புகார் அளித்தார். அதில் எங்களது முகவரியை பயன்படுத்தி சிலர் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மறுநாள் 14ம் தேதி சீகெம் விளையாட்டு அரங்கம் நிறுவனர் தாமோதரன் என்பவர், அபிராமியை வாட்ஸ் ஆப் காலில் மிரட்டுவதாக, அபிராமி கணவர் ஜெயச்சந்திரன் நெட்டப்பாக்கம் போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், நெட்டப்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குப்பதிந்து விசாசரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ