மேலும் செய்திகள்
மருமகள் புகார் மாமியார் மீது வழக்கு
02-Aug-2024
புதுச்சேரி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 பேரிடம் ரூ. 1 கோடி வரை வசூல் செய்து ஏமாற்றிய தம்பதி மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கணவர் இறந்து விட்டதால், மனைவியை தேடி வருகின்றனர்.புதுச்சேரி, வில்லியனுார், சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர் மசூர்தீன், 31; இவருக்கும் கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 30; என்பவருக்கும் கடந்த சில ஆண்டிற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. பிரவீன்குமார் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் அனுப்பும் வேலையை செய்து வருவதாக தெரிவித்தார். பிரான்சில் உள்ள ஓட்டலில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கு ஆள் தேவை என மசூர்தீனிடம் தெரிவித்தார்.இதை நம்பிய மசூர்தீன், அந்த வேலையை தனக்கு பெற்று தருமாறு பிரவீன்குமாரிடம் கேட்டார். அதற்கு பிரவீன்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் பல லட்சம் செலவு ஏற்படும் என தெரிவித்தனர். மசூர்தீன் முதற்கட்டமாக 3.5 லட்சம் ரூபாயை பிரவீன்குமார், ஷாலினியிடம் கொடுத்தார். பல மாதங்கள் கடந்தும் பிரவீன்குமார் வெளிநாட்டு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து பிரவீன்குமார், ஷாலினியிடம் மசூர்தீன் கேட்டபோது, சரியான பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். விசாரணையில், பிரவீன்குமார், ஷாலினி இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 15க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 1 கோடி வரை வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக மசூர்தீன் சி.பி.சி.ஐ.டி., போலீசில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். பிரவீன்குமார், ஷாலினியிடம் பணம் கொடுத்து ஏமாந்த மற்ற 15 பேரும் இந்த வழக்கில் புகார்தாரர்களாக சேர்க்கப்பட்டனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி பிரவீன்குமார் உயிரிழந்ததால், அவரது மனைவி ஷாலினியை போலீசார் தேடி வருகின்றனர்.
02-Aug-2024