உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பத்திரப் பதிவு அலுவலகத்தில் பவர் கட் ; மாலை வரை காத்திருந்த ஜோடிகள்

பத்திரப் பதிவு அலுவலகத்தில் பவர் கட் ; மாலை வரை காத்திருந்த ஜோடிகள்

புதுச்சேரி : உழவர்கரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஏற்பட்ட மின்வெட்டால், மாலை வரை திருமணத்தை பதிவு செய்ய முடியாமல், 10 ஜோடிகள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.புதுச்சேரி, உழவர்கரை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில், சொத்து விவகாரங்கள், திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்திற்கு தினசரி ஏராளமானோர் வருகின்றனர்.உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் திருமணத்தை பதிவு செய்ய அங்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பர். அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து, அலுவலகம் சார்பில், திருமணத்தை பதிவு செய்வதற்கு, குறிப்பிட்ட தேதி ஒதுக்கி தரப்படும்.அன்றைய தினம் சம்மந்தப்பட்ட ஜோடிகள், ஆவணங்கள், சாட்சிகளுடன் ஆஜராகி, அலுவலக முறைப்படி, திருமணத்தை பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு தங்களது திருமணத்தை பதிவு செய்ய, 10க்கும் மேற்பட்ட ஜோடிகள், அந்த அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது அங்கு மின்வெட்டு ஏற்பட்டது. அங்குள்ள ஜெனரேட்டரும் பழுதாகி இருந்ததால், மின்சாரம் வரும் வரை, அனைவரையும் அதிகாரிகள் காத்திருக்க அறிவுறுத்தினர். மதியம் வரையிலும் அலுவலகத்தில் மின்சாரம் இல்லாததால், திருமண பதிவு மட்டுமின்றி, சொத்து பத்திரப்பதிவு உள்ளிட்ட எந்த பணியும் நடக்கவில்லை. இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு பிறகு தான், அந்த பகுதியில் மின் விநியோகம் சீரானது. அதுவரை அனைத்து ஜோடிகளும் காத்திருந்தனர்.அதற்கு பிறகு, அவசர அவரசமாக, காத்திருந்தவர்களின் திருமண விவரங்களை அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் பதிவு செய்தனர். காலை முதல் மாலை வரை காத்திருக்க நேரிட்டதால், அங்கு வந்த அனைத்து தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ