உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரிமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி லாஸ்பேட்,கோரிமேடு, வீராம்பட்டினம் அணிகள் வெற்றி

பிரிமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி லாஸ்பேட்,கோரிமேடு, வீராம்பட்டினம் அணிகள் வெற்றி

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பிரிமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி, போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.வீராம்பட்டினம் அபீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த 12 வது போட்டியில், திருவண்டார் கோவில் டைட்டன்ஸ் அணி, லாஸ்பேட் லிஜென்ஸ் அணியும் மோதியது. முதலில் விளையாடிய லாஸ்பேட் லிஜென்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய திருவண்டார் கோயில் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. லாஸ்பேட் லிஜென்ஸ் அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருது லாஸ்பேட் லிஜென்ஸ் அணியன் ஸ்ரீதருக்கு வழங்கப்பட்டது.13வது போட்டியில், கோரிமேடு பேந்தர்ஸ் அணி, மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணி மோதியது. முதலில் ஆடிய கோரிமேடு பேந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சபரிராஜ் 51 பந்தில், 6 பவுண்டரி, 12 சிக்ஸர்கள் உடன் 113 ரன்கள் எடுத்தார். பின் களம் இறங்கிய மூலகுலம் கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெங்கடேஷ் சதம் அடித்தார். கோரிமேடு பேந்தர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சபரிராஜ்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.நேற்று நடந்த 14 வது போட்டியில் மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணி, வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி மோதியது. முதலில் விளையாடிய மூலகுளம் கிளாடியேட்டர்ஸ் அணி 14 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 5.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் செந்தமிழுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.சதம் அடித்த சபரிராஜ், வெங்கடேஷ் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ