உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் பிறந்த நாள் விழா

பிரதமர் பிறந்த நாள் விழா

வில்லியனுார் : பிரதமர் நரேந்திர மோடி 74வது பிறந்தநாள் விழா ஊசுடு தொகுதி, பத்துக்கண்ணு பகுதியில் அமைச்சர் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய்சரவணன்குமார் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பத்துக்கண்ணு சந்திப்பில், மத்திய அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு எடுத்துக் கூறி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.ஊசுடு தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் சாய் தியாகராஜன், தொகுதி தலைவர் அய்யனார் ஆகியோர் ஏற்பாட்டில் நடந்த விழாவில் பா,ஜ,, நிர்வாகிகள் முத்தாலு முரளி, சிவசங்கரன், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி