மேலும் செய்திகள்
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
07-Jul-2026
புதுச்சேரி: இந்திய மா.கம்யூ., புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் ராஜா தியேட்டர் அருகே நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தர்ராமன், பெருமாள், ராஜாங்கம், கலியமூர்த்தி, முருகன், சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், தேர்வு வினாத்தாள் வெளியான விவாகரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
07-Jul-2026