உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வில்லியனுாரில் வி.சி., போராட்டம்

வில்லியனுாரில் வி.சி., போராட்டம்

வில்லியனுார்:  வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 125 நாள் வேலை கேட்டு  வி.சி., கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  வில்லியனுார் மாவட்ட வி.சி.க சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு   மத்திய அரசு அறிவித்த 125 நாட்களை குறைக்காமல் முழுவதுமாக வேலை வழங்கவேண்டும்,  100 நாட்கள் வேலையில் பணிபுரிம் தொழிலாளர்களுக்கு ரூ.347-யை எவ்வித பிடித்தமும் இல்லாமல் முழுமையான தொகையை வழங்கவேண்டும். உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வி.சி. வில்லியனுார் மாவட்ட செயலாளர் தமிழரசன் முன்னிலையில் மாவட்ட பொருளாளர் ஜான் மற்றும்  அமைப்பு செயலாளர் தலையாரி மாநில அமைப்பு செயலாளர் ஆதவன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை 10:30 மணியளவில் நடந்த முற்றுகை போராட்டத்தில்  மத்திய மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.  இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மாசிவாகையரசு, எழில்மாறன், ஆற்றலரசு, கதிர்வேல், தயாநிதி, தொல்காப்பியன், பொன்னுரங்கம், கலைவாணன், ஆனந்த் மற்றும் வில்லியனூர் தொகுதி மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி