மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்
26-Aug-2024
புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை, சம்பத் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரியில் சமூக நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த, 8 பேருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி, பாரதிதாசன் நகரில் நடந்தது. இதில் பயனாளிகளுக்கு, முதலியார்பேட்டை எம்.எல்.ஏ., சம்பத், மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.விழாவில் சமூக நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
26-Aug-2024