மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கல்
வில்லியனுார்: புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் ஊசுடு தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை அமைச்சர் வழங்கினார்.புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் ஊசுடு தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பத்துக்கண்ணு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.நிகழ்ச்சியில் தொகுதியை சேர்ந்த 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு சமூக நலத் துறை சார்பில் ரூ.7:20 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை அமைச்சர் சாய்சரவணன் குமார் வழங்கினார்.நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் கருணாநிதி, அன்பரசன், சுருதி, ஊசுடு தொகுதி பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் சாய்தியாகராஜன், தொகுதி தலைவர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.