உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, எழுது பொருள்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். கணித பட்டதாரி ஆசிரியர் லலிதா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் சாமுண்டீஸ்வரி, சங்கரதேவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குபேரன், வருண், அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் பாராட்டி பேசினர். முன்னதாக, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு நுழைவு சீட்டு மற்றும் எழுது பொருட்கள் வழங்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் வீரகதிரவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ