உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி ரயில் நிலையத்தில் விரைவில் மக்கள் மருந்தகம்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் விரைவில் மக்கள் மருந்தகம்

புதுச்சேரி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரதமரின் மக்கள் மருந்தகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அனைவருக்கும் மலிவு விலையில் பொது மருந்துகள் கிடைக்க குறைந்த லாபத்தில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்தகத்தை நாடு முழுதும் ( பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா) பிரதமர் மக்கள் மருந்தகத்தை மத்திய அரசின் மருந்தியல் அமைச்சகம் துவக்கி வருகிறது. அதன்படி இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராம, நகரப்பகுதிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ரயில் நிலையங்களில் இந்த மருந்தகம் திறக்கப்பட்டு வருகிறது. அதைதொடர்ந்து புதுச்சேரியில் சில இடங்கள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் இந்த மருந்தகம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.அதிக அளவு பயணிகள் வந்து செல்லும் புதுச்சேரி ரயில் நிலையத்தின் முதலாவது நடை பாதையில் விரைவில் இந்த மருந்தகம் திறக்கப்பட உள்ளது. அதனையொட்டி புதிதாக கடை ஒன்று கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ