மக்கள் சந்திப்பு கூட்டம்
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதி அரியாங்குப்பம் அடுத்த, ஓடவெளி முத்து மாரியம்மன் கோவிலில், மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்று பேசினார். அப்பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நடந்து முடிந்த கோவில் கும்பாபிேஷக பணிகளை சிறப்பாக செய்ததற்கும், அப்பகுதியில், மின்சார வசதி, வாய்க்கால் சீரமைத்தற்கு சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தனர். அப்பகுதியில் சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தர மக்கள் கோரிக்கை வைத்தனர்.