பொதுமக்களுக்கு இடையூறு: 2 பேர் கைது
திருக்கனுார் : காட்டேரிக்குப்பத்தில் மது போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே பொது இடத்தில் மது அருந்திக் கொண்டு, அவ்வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்ட தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த சூர்யா, 24; மயிலம் பகுதியைச் சேர்ந்த விஜயஆனந்த், 22; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.