உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு தகவல் கையேடு வெளியீடு

எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு தகவல் கையேடு வெளியீடு

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கைக்கான சென்டாக் தகவல் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு மற்றும் தனியார் கல்லுாரியில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளை சென்டாக் நிரப்ப உள்ளது. முதல் கட்டமாக, நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத 7,080 இடங்களுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தியது.அடுத்து, எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்டையில் சேர்க்கை நடத்த தயாராகி வருகிறது. அதையொட்டி, எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கைக்கான சென்டாக் தகவல் கையேட்டினை www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் குறிப்பேட்டியில் விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பெறப்படும்.அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நிர்வாக இடங்கள், சுய நிதி இடங்களை பொருத்தவரை எஸ்.சி., - எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 1,000 ரூபாய், இதர பிரிவினர், பிற மாநில மாணவர்களுக்கு 2,000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ., பிரிவினருக்கு 5,000 ரூபாய் விண்ணப்பம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ