தேசிய வளு துாக்கும் போட்டி தங்கம் வென்ற புதுச்சேரி வீரர்
திருபுவனை: கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான வளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீரர் விஷால் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.புதுச்சேரி, மதகடிப்பட்டு புது நகர், முல்லை வீதியில் வசிக்கும் திருநாவுக்கரசு - சுந்தரி தம்பதியின் மகன் விஷால், 22. மூளை வளர்ச்சி குன்றிய மாற்றுத்தினறாளி மாணவர். புதுச்சேரி நைனார்மண்டபம் டே பிரேக்கர் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளர் பாக்கியராஜிடம் ஏழு ஆண்டுகளாக வளு துாக்கும் போட்டிக்கான பயிற்சி பெற்று வருகிறார்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை சிறப்பு மாணவர்களுக்கான பவர் லிப்டிங் (வளு துாக்கும்) தேசிய அளவில் நடந்தது. விஷால் 59 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.இவர், உலக அளவில் நடைபெறும் பவர் லிப்டிங் (வளு துாக்கும்) போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.