மேலும் செய்திகள்
இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி
23-Jan-2025
புதுச்சேரி : அகில இந்திய அளவிலான தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் புதுச்சேரி குழுவினர் பங்கேற்றனர்.பஞ்சாப் தேசிய இளைஞர் திட்டம், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் அகில இந்திய அளவிலான தேசிய இளைஞர் ஒருமைப்பாட்டு முகாம், பஞ்சாப் மாநிலம் குரு அங்கதேவ் கல்லுாரியில் நடந்தது.முகாமில், புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக தேசிய இளைஞர் திட்டத்தின் மாநில தலைவர் ஆதவன் தலைமையில் சுப்ரமணி, ஜெயப்பிரதா, யோகலட்சுமி பிரியதர்ஷினி, உள்ளிட்ட ஐவர் குழுவினர் பங்கேற்றனர்.21 மாநிலங்களை சேர்ந்த 221 பேர் பங்கேற்ற இந்த முகாமில் யோகா, சமூக சேவை, குழு பாடல்கள், விவாதங்கள், தேசியக் கொடி வணக்கம், கலை நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றனர்.பங்கேற்பாளர்களுக்கு பஞ்சாப் மாநில இளைஞர் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சித்து, குரு அங்கதேவ் கல்லுாரி முதல்வர் பல்வந்த் சிங் சந்து சான்றிதழ் வழங்கினர்.
23-Jan-2025