மேலும் செய்திகள்
அரியாங்குப்பத்தில் பா.ஜ., காலண்டர் வழங்கல்
15 hour(s) ago
ஐகோர்ட் நீதிபதி முதல்வருடன் சந்திப்பு
15 hour(s) ago
புதிய அங்கன்வாடி அமைக்க பூமி பூஜை
15 hour(s) ago
காகிதக்கூழ் கைவினைப் பயிற்சி
15 hour(s) ago
புதுச்சேரி: ஜப்பானில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில், புதுச்சேரியை சேர்ந்த சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி தலைமையில் மூத்த பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.ஜப்பானின் ஒக்கினோவா நகரில், வரும் 8ம் தேதி துவங்கி, 12ம் தேதி வரை, ஒக்கினோவா கராத்தே திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவிலான கராத்தே தொடர்பான கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கராத்தே நடுவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி தலைமையில் மூத்த பயிற்சியாளர்கள் கண்ணன், திவாகர், ஜவகர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.இதனையொட்டி சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணிக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் ஜோதிமணி கவுரவிக்கப்பட்டார்.இந்தியாவின் கராத்தே தந்தை என, அழைக்கப்படும் மணியின் மாணவரான ஜோதிமணி, கடந்த 50 ஆண்டு காலமாக கராத்தே பயிற்சி அளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து சிறந்த கராத்தே வீரர்களாக உருவாக்கி உள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் கராத்தே கலையில் முதல் பிளாக்பெல்ட் வாங்கிய ஜோதிமணி, மாநில கராத்தே போட்டியை அறிமுகப்படுத்தியதன் மூலமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக கராத்தே பயிற்சி அளித்துள்ளார். ஜவகர்பால் பவனில் 1980ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago