உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலை., எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வு திடீர் ரத்து வினாத்தாள் லீக் ஆனதாக பரபரப்பு

புதுச்சேரி பல்கலை., எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வு திடீர் ரத்து வினாத்தாள் லீக் ஆனதாக பரபரப்பு

புதுச்சேரி: நீட் நுழைவு தேர்வு வினா தாள் லீக் விவகாரத்தினை தொடர்ந்து, புதுச் சேரி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவி வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்பட நான்கு தனியார் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இங்கு பயிலும் 830 முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கு இன்று 5ம் தேதி முதல் மருத்துவத் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்கான ஹால்டிக்கெட் 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இது போன்ற சூழ்நிலையில் திடீரென தற்போது முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வு ரத்து செய்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவ மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கு நிர்வாக காரணம் என பல்கலைகழகம் கூறி இருந்தாலும், பல்வேறு காரணங்கள் பெற்றோர்களும், மாணவர்களும் கூறி வருகின்றனர். வினாதாள் லீக் ஆனதால் தான், எம்.பி.பி.எஸ்., தேர்வு ரத்து செய்யப்பட்டதாக சமூக வளைதளத்தில் தகவல் பரவி வருகின்றது. இது குறித்து சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி கூறும்போது, புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைப்பு கல்லுாரிகளில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை உறுதி செய்து மாணவர்கள் தேர்வு எழுத ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக நடக்கவிருந்த தேர்வு ரத்து செய்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவுகிறது.அதேபோன்று ஒரு தனியார் மருத்துவ கல்லுாரியின் 250 இடங்களில் 150 இடங்களுக்கு மட்டுமே புதுச்சேரி பல்கலைக்கழகம் இணைப்பு அரங்கீகாரம் அளித்துள்ளது.மீதமுள்ள 100 இடங்களுக்கு இன்னும் இணைப்பு அங்கீகாரம் அளிக்கவில்லை, அதற்கு அனுமதி அளிக்க காலதாமதம் ஆவதால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், மாறுபட்ட கருத்தும் நிலவுகிறது. மேலும், முதலாம் ஆண்டு தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இது பல்கலை., தேர்வு மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்றார். நீட் நுழைவு தேர்வு வினா தாள் விவகாரத்தினை தொடர்ந்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு தேர்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் பரவி வருவதால் மாணவர்கள், பெற்றோர்கள் உச்சக்கட்டத்தில் குழப்பத்தில் உள்ளனர். முதலாண்டு எம்.பி.பி.எஸ்., தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளியிட்டு, குழப்பங்களுக்கு புதுச்சேரி பல்கலைக்கழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை