உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரஜினி நடிக்கும் வேட்டையன் புதுச்சேரியில் படப்பிடிப்பு

ரஜினி நடிக்கும் வேட்டையன் புதுச்சேரியில் படப்பிடிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் திரைப்படத்தின் இறுதி கட்ட சண்டை காட்சி படபிடிப்பு உப்பளம் துறைமுக வளாகத்தில் நடந்து வருகிறது. திரைப்பட இயக்குநர் ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்பு, தமிழகத்தின் பல இடங்களில் நடந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்த் பங்கேற்கும் சண்டைக் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களாக, புதுச்சேரி உப்பளம் புதிய துறைமுக வளாகத்தில் நடைபெற்று வரும் படிப்பிடிப்பு இன்றும், நாளையும் நடக்கிறது. நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த், வெளிநாட்டு நடிகருடன் சண்டையிடும் காட்சிகள் படமாக்கப்பட்டது.படப்பிடிப்பிற்காக பயன்படுத்தும் ஹெலிகாப்டர் புதுச்சேரி நகர பகுதியில் வலம் வந்தது. படப்பிடிப்பு முடிந்து கேரவன் வேனில் இருந்து வேட்டி சட்டையுடன் ரஜினி இறங்கி செல்லும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
மே 09, 2024 05:05

அப்பாடா, இனி நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து விடும்


Parameswar Bommisetty
மே 09, 2024 09:08

என்ன ஒரு நக்கல்


புதிய வீடியோ