உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசின் செயல்பாடுகளுக்கு புகழாரம் கவர்னருக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு

அரசின் செயல்பாடுகளுக்கு புகழாரம் கவர்னருக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., பாராட்டு

புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:கவர்னர் தனது உரையில் நமது அரசின் செயல்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் எடுத்துக் கூறியுள்ளார். குறிப்பாக, பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கிய நமது அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.உலக வங்கி நிதி உதவியோடு ரூ.1,433 கோடி செலவில் கடலோர கரை பகுதிகளை பாதுகாத்து, அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் நிலைத்து நிற்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.புதுச்சேரி விமான நிலையம் 3,000 மீட்டர் அளவிற்கு நீட்டிக்கவும், புதுச்சேரியில் இருந்து கூடுதல் ரயில் சேவைகள் துவங்கவும் அரசு முயற்சித்து வருவதை கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.காரைக்காலில் ரூ.10.5 கோடி செலவில் ஆயுஷ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. ஐ.டி., துறை மற்றும் தொழிலாளர் நலனிலும் அரசு சிறப்பான பல முன்னெடுப்புகளை கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.பிரதமர் கூறியது போல ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், ரூ.116 கோடி செலவில் கங்கைவராக நதீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோவில்கள் புனரமைக்கப்பட்டு வருவதையும் கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சுய உதவி குழுக்களுக்கு உதவிடும் வகையில் 38 இ ரிக் ஷாக்கள் ரூ.96 லட்சம் செலவில் நகரம் முழுவதும் இயக்கும் திட்டத்தையும் குறிப்பிட்டுள்ளார் .ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான நிதியுதவி ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ. 6 ஆயிரமாக உயர்த்தப்படும். பிரதமர் கனவு திட்டமான பெஸ்ட் புதுச்சேரி என்ற இலக்கை நோக்கி பயணிப்பதையும் கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து துறைகளும் மிகச் சிறப்பாக மக்களுக்கு தேவையான திட்டங்களை நமது அரசு சிறப்பான முறையில் செய்து வருவதை பாராட்டியுள்ள கவர்னருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை