உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / என்.ஆர்.காங்., இளைஞர் அணி தலைவராக ரமேஷ் எம்.எல்.ஏ., நியமனம்

என்.ஆர்.காங்., இளைஞர் அணி தலைவராக ரமேஷ் எம்.எல்.ஏ., நியமனம்

புதுச்சேரி: என்.ஆர்.காங்., மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து என்.ஆர்.காங்., மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை:அகில இந்திய என்.ஆர்.காங்., தலைவர், முதல்வர் ரங்கசாமி, என்.ஆர்.காங்., மாநிலம், மாவட்டம், தொகுதி தலைவர்கள் நிர்வாகிகள் நியமனம் செய்து ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மாநில இளைஞர் அணி தலைவராக ரமேஷ் எம்.எல்.ஏ., மாநில தொண்டர் அணி தலைவராக வீரா (எ) வீராசாமி, மத்திய மாவட்ட தலைவராக ராஜகோபால் (எ) அங்கப்பன், கிழக்கு மாவட்ட தலைவராக பாஸ்கரன், முதலியார்பேட்டை தொகுதி தலைவராக வீரபத்திரன், மணவெளி தொகுதி தலைவராக குமரவேல், காமராஜர் நகர் தொகுதி தலைவராக தணிகைவேல், ஊசுடு தொகுதி தலைவராக தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை