உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவப்பு ரேஷன்கார்டுகளை நான்கு வகையாக பிரிக்க பரிந்துரை: மீண்டும் புத்தக வடிவில் வருகிறது ரேஷன்கார்டுகள்

சிவப்பு ரேஷன்கார்டுகளை நான்கு வகையாக பிரிக்க பரிந்துரை: மீண்டும் புத்தக வடிவில் வருகிறது ரேஷன்கார்டுகள்

புதுச்சேரி: குடிமை பொருள் வழங்கல் துறையின் சேவைகளை துரிதப்படுத்த பல்வேறு பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்படுள்ளது. மீண்டும் புத்தக வடிவில் ரேஷன் கார்டுவர உள்ளது.மக்களின் அத்தியாவசிய துறையான குடிமை பொருள் வழங்கல் துறையில் லஞ்சம் கொடுத்தால் தான் ரேஷன்கார்டுகள் வாங்க முடிகிறது என குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வரு கின்றன.பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.எல்.ஏ.,க் களும், அரசியல் கட்சியி னர் அடிக்கடி முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில் குடிமை பொருள் வழங்கல் துறை சேவைகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய் துள்ளது. முதற்கட்ட பொது சேவை மையத்தின் வாயிலாக விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. அடுத்தக் கட்டமாக துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமுருகன் உத்தரவின்பேரில் ரேஷன்கார்டு சேவைகளை எளிமைப்படுத்த பல்வேறு பரிந்துரைகள் முன்மொழி யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகின்றது.

ஆட்கள் பற்றாக்குறை

குடிமை பொருள் வழங்கல் துறை போதுமான பணியாளர்கள் இல்லாமல் தடுமாறுகின்றது. எனவே 100 இளைஞர்கள் நல்ல சம்பளத்தில் விரைவில் தேர்வு செய்யப்பட்டு, 30 தொகுதிகளில் ரேஷன் கார்டு சேவைகளை துரிதப்படுத்த களம் இறக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு அதிகாரிகள் தலைமையில் மண்டல அலுவலகம் இயங்க உள்ளது. அந்தந்த தொகுதிகளுக்கு அங்கேயே விண்ணப்பம் பெற்று புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள பணியாளர்களை கொண்டு ஆய்வு செய்து, உடனுக்குடன் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.

மீண்டும் புத்தகம்

மாநிலத்தில் கடந்த காலங்களில் புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு ஒரு அட்டை மட்டும் ரேஷன்கார்டு என்ற பெயரில் பெயருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது மக்களை கவரவில்லை. தற்போது ரேஷன் கார்டுகளில் மீண்டும் இலவச அரிசி வழங்க முயற்சி எடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் மீண்டும் புத்தக வடிவில் ரேஷன்கார்டுகளை வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நான்கு வகை சிவப்பு ரேஷன்கார்டு;

புதுச்சேரி மாநிலத்தில் 1,67,353 மஞ்சள் ரேஷன் கார்டுகள், 1,86,397 சிவப்பு ரேஷன் கார்டுகள் என மொத்தம் 3,50,750 ரேஷன்கார்டுகள் உள்ளன. சிவப்பு ரேஷன்கார்டுகளை தகுதியில்லாதவர்கள், பணக்காரர்கள் வைத்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் சிவப்பு ரேஷன்கார்டுகளை உடனடியாக நீக்க எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை. எனவே சிவப்பு ரேஷன்கார்டுகளை ஏ,பி, சி, டி என நான்கு வகையாக பிரிக்கப்பட உள்ளது. வறுமையில் குடிசையில் வீடுகளில் இருப்பவர்களுக்கு ஏ பிரிவில் இடம் பெற உள்ளனர்.

5 சேவைகள்;

குடிமைபொருள் வழங்கல் துறையில் பெயர் நீக்கம், பெயர் சேர்ப்பு, புதிய ரேஷன் கார்டு தேவைக்காக தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறையை பொதுமக்கள் நாடுகின்றனர். ஆனால், அத்துறை வளளாகத்தில் அவ்வளவு சுலபத்தில் சேவைகள் கிடைப்பதில்லை. அப்படியே நடையாய் நடந்தாலும் உடனடியாக சேவைகள் கிடைத்துவிடாது. பெயர் சேர்க்க அல்லது நீக்க கூடவா பல மாதங்கள் இழுக்கடிப்பது என்ற குற்றச்சாட்டு ஏழுந்தது. இது தொடர்பாக பெரிய விவாதம் எழுந்துள்ள சூழ்நிலையில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்பட 5 முக்கிய ரேஷன்கார்டு சேவைகளை விண்ணப்பித்த உடனே தந்துவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் ஆலோசனை:

புதிய பரிந்துரைகள் பற்றி அமைச்சர் திருமுருகன் கூறும்போது, குடிமை பொருள் துறையின் சேவைகளை அனைத்தையும் எளிமைப்படுத்த பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து முதல்வர், துறை செயலரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். ரேஷன்கார்டில் போட்டோ; ரேஷன்கார்டுகளில் பொதுவாக குடும்ப தலைவர்களின் படம் மட்டுமே இடம் பெறும். புதுச்சேரியில் தற்போதுள்ள ரேஷன்கார்டு அட்டையில் அது கூட இல்லை. புதிதாக வழங்க திட்டமிட்டுள்ள ரேஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது படத்தையும் பதிவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதல்வரிடம் ஆலோசனை:

புதிய பரிந்துரைகள் பற்றி அமைச்சர் திருமுருகன் கூறும்போது, குடிமை பொருள் துறையின் சேவைகளை அனைத்தையும் எளிமைப்படுத்த பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக துறை அதிகாரிகளிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து முதல்வர், துறை செயலரிடம் கலந்து ஆலோசித்து விரைவில் செயல்படுத்தப்படும் என்றார். ரேஷன்கார்டில் போட்டோ; ரேஷன்கார்டுகளில் பொதுவாக குடும்ப தலைவர்களின் படம் மட்டுமே இடம் பெறும். புதுச்சேரியில் தற்போதுள்ள ரேஷன்கார்டு அட்டையில் அது கூட இல்லை. புதிதாக வழங்க திட்டமிட்டுள்ள ரேஷன்கார்டுகளில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது படத்தையும் பதிவிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

nagendhiran
ஆக 30, 2024 07:46

வாக்குக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் குடும்ப அட்டை தர பறிதுரைக்கும் சமஉ க்கள் இருக்கும் வரை புதுச்சேரி உறுப்படாது?