உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஏரிக்கரையில் கொட்டிக்கிடந்த காலாவதியான பொருட்கள் அகற்றம்

ஏரிக்கரையில் கொட்டிக்கிடந்த காலாவதியான பொருட்கள் அகற்றம்

திருக்கனுார்: வம்புப்பட்டு ஏரிக்கரையில் கொட்டியிருந்த காலாவதியான பிஸ்கட், நுாடுல்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொம்யூன் ஆணையர் ஆய்வு செய்து, அகற்றினார்.வம்புப்பட்டு ஏரிக்கரை பகுதியில், காலாவதியான உணவு பண்டங்கள் மற்றும் சேவிங் பிளேடுகள் உள்ளிட்ட பொருட்கள் கொட்டிக் கிடந்தன. இது குறித்து கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார் வந்தது.மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் அலுவலர்கள், அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏரிக்கரை அருகே காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், நுாடுல்ஸ், மிட்டாய் பாக்கெட்டுகள் மற்றும் சேவிங் பிளேடுகள் உள்ளிட்டவை மூட்டை, மூட்டையாக கொட்டிக் கிடந்தன. இதனையடுத்து, அங்கு கொட்டப்பட்டிருந்த காலாவதியான பொருட்களை கொம்யூன் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து, ஆணையர் எழில்ராஜன், திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில், காலாவதியான பொருட்கள் எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை