உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் சிறப்பு நிதியை பெற்று சார்பு நிறுவனங்களை இயக்க கோரிக்கை

மத்திய அரசின் சிறப்பு நிதியை பெற்று சார்பு நிறுவனங்களை இயக்க கோரிக்கை

புதுச்சேரி: மானிய கோரிக்கைகள்மீதான விவாதத்தில் ராமலிங்கம் எம்.எல்.ஏ., பேசியதாவது:புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமைச் செயலகம் கட்டுவதில் அரசு விரைந்து கவனம் செலுத்த வேண்டும். லிங்காரெட்டிபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.ஸ்பின்கோ ஆலை முழு அளவில் இயக்கப்பட வேண்டும். பாசிக், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று நஷ்டத்தில் இயங்கும் அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தையும் மேம்படுத்தி இயக்க வேண்டும். இலவச அரிசி, மற்றும் பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை மானிய விலையில் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிப்பு சிறப்பான அறிவிப்பு. ஆனால் எந்த இடத்தில் மக்களுக்கு இந்த பொருட்கள் வழங்கப்படும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.ஏற்கனவே ரேஷன் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் புதிய கடைகள் ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணா நகர், ரெயின்போ நகருக்கு இடையில் வேதபுரீஸ்வரர், வரதராஜபெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் மழைநீரும், கழிவு நீரும் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.இரு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி என்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ