உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் வாகனங்களுக்கு சாலை வரியில் சலுகை

மின் வாகனங்களுக்கு சாலை வரியில் சலுகை

சி.என்.ஜி., டெம்போ வாங்குவதற்கும் மானியம்புதுச்சேரி: புதுச்சேரி பட்ஜெட் உரையில் மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் 50 சதவீத சலுகையும், சி.என்.ஜி., டெம்போக்கள் வாங்க 50 சதவீத மானியம் அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், போக்குவரத்து துறை அறிவிப்புகள்;புதுச்சேரியில் பசுமை இயக்க கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் புதுச்சேரி சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மாறுதலை துாரிதப்படுத்தும். மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, புதுச்சேரியில் மின் வாகனங்களை வாங்குவதற்கு மானியம் வழங்குவதுடன், அத்தகைய வாகனங்களை பதிவு செய்யும் போது சாலை வரியில் 50 சதவீதம் சலுகையும் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.பிரதமர் இ- பஸ் திட்டத்தின் மொத்த செலவு ஒப்பந்தத்தின் கீழ் 75 மின்சார பஸ்களை இயக்குவதற்கு புதுச்சேரி அரசு முன்மொழிவு சமர்ப்பித்தது. மத்திய அரசு ஒப்பந்த புள்ளிகளை இறுதி செய்துள்ளது. இதற்கான புதுச்சேரி அரசு ஒப்புதல் இம்மாதத்திற்குள் தெரிவிக்கப்படும்.இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 9 மீட்டர் நீள 25 மின்சார பஸ்கள், 12 மீட்டர் நீள 50 மின்சார பஸ்கள் இயக்கப்படும். இதன் மூலம் புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் மூன்றில் இரண்டு பங்கு பஸ்கள் மின் மயமாக்கப்படும்.மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசு மூலம் ரூ. 8.15 கோடி மதிப்பீல் மின்-பணிமனை நிறுவுவதற்கும், மின் அளவி உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10 கோடி செலவில் இண்டலிஜின்ட் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் தானியங்கி கட்டண வசூல் முறை செயல்படுத்துவதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.பி.ஆர்.டி.சி., மூலம் நீண்ட துார வழித்தடங்களுக்கு 10 மிதவை பஸ்களை இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதிக்கு 10 இ-பஸ்கள், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியத்திற்கு 9 மீட்டர் நீளத்தில் தலா 5 பஸ்கள் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.நகரப்பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 38 இ-ரிக் ஷா, 25 இ-பஸ்கள் இயக்கப்படும். 15 நவீன பஸ் நிறுத்தங்கள் மார்ச் 2025க்குள் அமைக்கப்படும். காற்று மாசுபடுதல் கட்டுப்படுத்த, சுற்றுச்சூழலை மேம்படுத்த, தற்போது பொது போக்குவரத்திற்காக இயக்கப்பட்டு டெம்போக்களுக்கு மாற்றாக வாங்கப்படும் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி) மூலம் இயங்கும் டெம்போக்களுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ