மேலும் செய்திகள்
ஆபாச பேச்சு: இருவர் கைது
08-Jun-2026
அரியாங்குப்பம், ஜூன் 26– தவளக்குப்பம் அடுத்த டி.என்.,பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. போலீசார் அங்கு சென்று, கத்தியுடன் நின்றவரை பிடித்து விசாரித்தனர். டி.என்., பாளையம், உடையார் தெரு சக்திவேல் மகன் சண்முகம், 25, என்பதும், இவர் மீது தவளக்குப்பம் போலீசில் கொலை, கொலை முயற்சி, அடிதடி, கஞ்சா விற்பனை உட்பட பல வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
08-Jun-2026