உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ.3 லட்சம் நிவாரண பொருட்கள் மார்க்கெட் வியாபாரிகள் வழங்கல்

ரூ.3 லட்சம் நிவாரண பொருட்கள் மார்க்கெட் வியாபாரிகள் வழங்கல்

புதுச்சேரி புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள், வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு, 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்திடம் வழங்கினர்.கேரள மாநிலம், வயநாடு பகுதியில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டு, 300 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, புதுச்சேரி ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.இந்நிலையில், புதுச்சேரி பெரிய மார்க்கெட் வியாபாரிகள் நேற்று, ரூ.3 லட்சம் மதிப்பில் அரிசி, மளிகை பொருட்கள், துணி வகைகள், பிளாஸ்டிக் பக்கெட், குவளை, பாய், தலையணை, சோப்பு உள்ளிட்ட பொருட்களை, ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் சேது செல்வத்திடம் வழங்கினர்இதில் காந்தி, ரூ.1 லட்சம் மதிப்பில், 2 டன் அரிசி; நாராயணன், ரூ.23,300,க்கு பக்கெட், குவளைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. நிவாரணப் பொருட்களை தொடர்ந்து திரட்டும் பணியில், பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவத் தலைவர் குழந்தை என்ற சுப்ரமணி, தலைவர் சிவகுரு,அடிக்காசு வியாபாரிகள் சங்க தலைவர் தயாளன், செயலாளர் பாலா மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.திரட்டப்பட்ட நிவாரணப் பொருட்கள், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்க மத்திய தலைமை மூலம், பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு அனுப்பி வைக்கப்படஉள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை