உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3 பேரிடம் ரூ. 63,000 அபேஸ்

3 பேரிடம் ரூ. 63,000 அபேஸ்

புதுச்சேரி : தவளக்குப்பத்தை சேர்ந்த கருப்பையா என்பவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், வங்கி அதிகாரி போல் பேசி, கிரெடிட் கார்டு விவரங்களை கேட்டுள்ளார்.இதைநம்பி அவர், கிரெடிட் கார்டு விவரம் மற்றும் ஓ.டி.பி., எண்களை தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 49 ஆயிரத்து 883 ரூபாய் எடுக்கப்பட்டது. இதேபோல், வைத்திகுப்பம் ஆதர்ஷ் 8 ஆயிரம், ஆரோவில் ரவிசங்கர் 5 ஆயிரத்து 400 ரூபாய் என, 3 பேர் 63 ஆயிரத்து 283 ரூபாய் ஏமாந்தனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ