உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பேரிடம் ரூ.12.55 லட்சம் அபேஸ்

7 பேரிடம் ரூ.12.55 லட்சம் அபேஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் 7 பேர் நேற்று ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.12.55 லட்சத்தை இழந்துள்ளனர். புதுச்சேரி, ஜவகர் நகரை சேர்ந்தவர் கவிதா. இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடியே அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி கவிதா ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் முதலீடு செய்து, ஏமாந்தார்.இதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார். மேலும், புதுச்சேரியை சேர்ந்த கலைவாணி 1 லட்சத்து 23 ஆயிரம், பிரமிளா 88 ஆயிரம், அரியூர் ஆனந்த் 25 ஆயிரம், பி.எஸ்.பாளையம் சுபாஷ் 26 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த முபாரக் அலி 51 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை