புதுச்சேரியில் சாம்போ பயிற்சி முகாம்
புதுச்சேரி; புதுச்சேரி சாம்போ அசோசியேஷன் மற்றும் சென்னை ரஷ்யன் துாதரகம் சார்பில் ஒருநாள் சாம்போ பயிற்சி முகாம், முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமை, நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். சாம்போ ஏசியா டைரக்டர் சுரேஷ் கோபி, தென்னிந்தியா ரஷ்யன் துாதரக கவுன்சில் இளைய வாரிசோ, சாம்போ அகில உலக சாம்பியன்கள் ரஷ்யாவின் யாளி குருசேவ், ருஸ்லான் வரிசோ ஆகியோர் மாணவர்களுக்கு உயர்தர சாம்போ பயிற்சி அளித்தனர். கோஜ்ரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தரராஜன், உப்பளம் விளையாட்டு அரங்கின் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில், சங்க உறுப்பினர்கள் ஜனார்த்தனன், கோதண்டராமன், மதிவாணன், பழனிராஜ், சரவணன், ரவிசங்கர், சீனியர் பயிற்சியாளர்கள் கோபாலகிருஷ்ணன், செந்தில், கவிதா, முருகன், தினேஷ், லலிதா, சரண்ராஜ், கரண், ரவிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க பொதுச் செயலாளர் மதிஒளி செய்திருந்தார்.