மேலும் செய்திகள்
இரவு நேரங்களில் கடற்கரையில் அசுர பயணம்
13-Jul-2026
புதுச்சேரி: சுற்றுலா பயணிகளிடம் ஸ்கூட்டர் திருடி சென்றது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கோவிந்தசாலையை சேர்ந்தவர் ராஜசேகரன்,44; இவர் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரிடம், கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் டி.வி.எஸ்., ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின் அவர்கள் கடற்கரை சாலையை ஒட்டியுள்ள துமாஸ் வீதியில் உள்ள ஒரு உணவகத்தின் எதிரில், ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றனர். பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, ஸ்கூட்டரை காணவில்லை. இது குறித்து ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Jul-2026